search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உஸ்பெகிஸ்தான் ராணுவ மந்திரியுடன் ராஜ்நாத் சிங்
    X
    உஸ்பெகிஸ்தான் ராணுவ மந்திரியுடன் ராஜ்நாத் சிங்

    ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க உஸ்பெகிஸ்தான் சென்றார் ராஜ்நாத் சிங்

    உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தாஷ்கன்ட் வந்தடைந்தார்.
    தாஷ்கன்ட்:

    சீனா, கஜகஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் சுழற்சி அடிப்படையில் இந்த ஆண்டு உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகரான தாஷ்கன்ட்  நகரில் நடைபெறுகிறது.

    இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளை சேர்ந்த ராணுவ மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து  3 நாள் அரசுமுறை பயணமாக புறப்பட்டு சென்ற இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இன்று பிற்பகல் தாஷ்கன்ட் வந்தடைந்தார்.

    துஷான்பே நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் முன்னாள் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன்

    ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா 2017-ம் ஆண்டில் இணைக்கப்பட்டது. அந்த ஆண்டு ரஷியாவின் சோச்சி நகரிலும் 2018-ம் ஆண்டு தஜிகிஸ்தான் நாட்டின் துஷான்பே நகரிலும் இந்த மாநாடு நடைபெற்றது நினைவிருக்கலாம்.
    Next Story
    ×