search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஷிய தூதர் அனட்டோலி அன்டோனோவ் , டிரம்ப்
    X
    ரஷிய தூதர் அனட்டோலி அன்டோனோவ் , டிரம்ப்

    டிரம்ப் தனது அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டார், ஒன்றைத்தவிர - ரஷிய தூதர்

    ஒரே ஒரு வாக்குறுதியை தவிர அமெரிக்கா அதிபர் டிரம்ப் தனது அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டார் என ரஷிய தூதர் தெரிவித்துள்ளார்.
    மாஸ்கோ:

    அமெரிக்கா-ரஷியா நாடுகள் இடையே அணு ஆயுத உடன்படிக்கை ரத்து, சிரியா விவகாரம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருகின்றன. குறிப்பாக அணு ஆயுத பயன்பாட்டை கட்டுப்படுத்தும் ரஷிய அமெரிக்கா இடையேயான பனிப்போர் ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்தானது.

    இதையடுத்து அமெரிக்கா நடுத்தர ரக ஏவுகணை சோதனையை நிகழ்த்தியது. ராணுவ பதற்றங்களை அதிகரிக்க அமெரிக்கா இது போன்ற ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தியுள்ளது ஆனால் நாங்கள் இம்மாதிரியான ஆத்திரமூட்டும் செயல்களுக்கு பதிலடி எதுவும் கொடுக்க மாட்டோம் ரஷியா வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி ரியாப்கோவ் கூறினார்.

    இந்நிலையில், ஒரே ஒரு வாக்குறுதியை தவிர அமெரிக்கா அதிபர் டிரம்ப் தனது அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டார் என அமெரிக்காவிற்கான ரஷிய தூதர் அனட்டோலி அன்டோனோவ் தெரிவித்துள்ளார்.

    உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அன்டோனோவ் பேசியதாவது:-

    ரஷியாவுடன் நட்புறவு பாராட்டுவதைத் தவிர அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டார் என நான் நினைக்கிறேன். எனது கருத்துப்படி இரு நாடுகளுக்கிடையேயான விவகாரங்களை உன்னிப்பாக கையாள வேண்டிய தருணம் வந்து விட்டது.

    ரஷியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு அவ்வளவு மோசமாக இல்லை, பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான ஆலோசனைகள், உயர்மட்ட பேச்சுவார்த்தகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

    ரஷியாவை பொறுத்தவரை இம்மாதிரியான பேச்சுவார்த்தைகள், நடைமுறைகேற்றவாறு விஷயங்களை கையாள்வது மற்றும் இரு நாடுகளிடையேயான பரஸ்பர உறவுகள் போன்றவற்றிற்கு தயாராக உள்ளோம்.

    கொரிய தீபகற்பம் மற்றும் ஆப்கானிஸ்தான் நிலைமை உள்ளிட்ட விவகாரங்களில் ஒரே நிரந்தரமான நிலைப்பாட்டுடன் ரஷியாவும் அமெரிக்காவும் ஆலோசனைகள் நடத்தி வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×