search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிலி நாட்டில் போராட்டம்
    X
    சிலி நாட்டில் போராட்டம்

    சிலி நாட்டில் பிரதமர் பதவி விலகக் கோரி 10 லட்சம் மக்கள் போராட்டம்

    சிலி நாட்டில் பொருளாதார சீர்திருத்தங்களை கண்டித்தும், அந்நாட்டு பிரதமர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் லட்சக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர்.
    சாண்டியாகோ: 

    தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டில் பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அரசின் நிர்வாகத்தில் உள்ள ரெயில் மற்றும் பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்து கட்டணங்கள் பலமடங்காக உயர்த்தப்பட்டன. மேலும் ஊதியம் மற்றும் ஓய்வூதியம், மருத்துவமனை கட்டணங்கள் ஆகியவற்றிலும் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த கட்டண உயர்வு மற்றும் சீர்திருத்தங்களை கண்டித்து சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோ உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். 

    ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டதால் ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களை தாக்கி சூறையாடினர். போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் வெடித்த மோதலில் சிலர் காயமடைந்தனர். இதையடுத்து சிலி நாட்டில் அவரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.  

    பிரதமர் செபாஸ்டின் பினேரா பதவி விலக வேண்டும் என 10 லட்சத்திற்கும் மேலான மக்கள் போராட்டம் நடத்தினர். தலைநகர் சாண்டியாகோவில் உள்ள டவுன் ஹாலில் பொருளாதார சீர்திருத்தங்களைக் கண்டித்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 8 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் பேரணி நடத்தினர். 

    இது குறித்து சிலி ஆளுநர் கூறுகையில், வரலாற்று மிக்க தினம், அமைதியான பேரணி புதிய சிலி உருவாகுவதற்கான கனவை இது பிரதிபலிக்கிறது, என தெரிவித்தார். 

    மக்கள் போராட்டம் நீடிக்கும் நிலையில், சிலி பிரதமர் செபாஸ்டின் தனது டுவிட்டர் பக்கத்தில் இப்போராட்டம் குறித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

     “சிலி நாட்டை அமைதியான புதிய பாதையில் கொண்டு செல்வதற்கான கோரிக்கைகளை முன்னிறுத்தி மக்கள் பேரணி நடத்தியுள்ளனர். நாட்டின் நலனை நோக்கி மட்டுமே இனி அரசு செயல்படும். சமூக அமைதியின்மை ஏற்பட்டதற்காக வருந்துகிறோம். நாட்டில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை சட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி விரைவில் அறிவிக்கப்படும்” என செபாஸ்டின் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×