search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்
    X
    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

    “மகிழ்ச்சிகரமாக, ஆசீர்வதிக்கப்பட்டதாக கொண்டாட்டம் அமையட்டும்” - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீபாவளி வாழ்த்து

    மகிழ்ச்சிகரமாக, ஆசீர்வதிக்கப்பட்டதாக கொண்டாட்டம் அமையட்டும் தீபாவளி அமையட்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்து மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தீபாவளியையொட்டி இந்து மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

    இதையொட்டி அவர் விடுத்துள்ள செய்தியில், “அமெரிக்கா முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது, நமது நாட்டின் மிக முக்கிய கொள்கையான மத சுதந்திரத்தை நினைவுபடுத்துவதாகும்” என கூறி உள்ளார்.

    மேலும், “நமது அரசியல் சாசனத்தில் கூறி உள்ள உரிமைகளை எனது நிர்வாகம் பாதுகாக்கும். இதன்மூலம் எல்லா மத நம்பிக்கை கொண்ட மக்களும் தங்கள் நம்பிக்கையின்படியும், மனசாட்சியின்படியும் வழிபட முடியும்” எனவும் கூறி உள்ளார்.

    அத்துடன், “தீபங்களின் பண்டிகையான தீபாவளி கொண்டாடுகிறவர்களுக்கு, அந்த கொண்டாட்டம் மகிழ்ச்சிகரமானதாகவும், ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் அமைய நானும், மனைவி மெலனியாவும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்” என தெரிவித்து இருக்கிறார்.

    வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்ப், தீபாவளியை கொண்டாடியதும், அதில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×