search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொலிவியா அதிபர் இவோ மோரல்ஸ்
    X
    பொலிவியா அதிபர் இவோ மோரல்ஸ்

    பொலிவியா தேர்தல் முடிவுகள்- அதிபர் பதவியை மீண்டும் தக்க வைத்தார் மோரல்ஸ்

    பொலிவியாவில் நடந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் இவோ மோரெல்ஸ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
    பியூனஸ் அயர்ஸ்:

    தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், தற்போதைய அதிபர் இவோ மோரல்ஸ் (சோசலிச இயக்கம்), முன்னாள் அதிபரும் புரட்சிகர இடது முன்னிணி தலைவருமான கார்லஸ் மெசா ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவியது. இந்த தேர்தலில் மொத்தம் 88.31 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் இறுதி முடிவை வெளியிட்டுள்ளது.

    அதில், தற்போதைய அதிபர் இவோ மோரல்ஸ் 47.07 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கார்லஸ் 36.51 சதவீத வாக்குகளே பெற்றார். அவரை விட இவோ மோரல்ஸ் 10.56 சதவீதம் கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளார். இதன்மூலம், 4வது முறையாக இவோ மோரல்ஸ் அதிபராக பதவியேற்க உள்ளார்.

    போராட்டம் நடத்திய எதிர்க்கட்சியினர்

    தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி 99.9 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டிருப்பதாகவும், பெனி பிராந்தியத்தில் பதிவான வாக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த குறிப்பிட்ட பகுதியில் நவம்பர் மாதம் மீண்டும் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இந்த தேர்தல் இறுதி முடிவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 

    தேர்தலில் தான் வெற்றி பெற்றுவிட்டதாக அதிபர் இவோ மோரல்ஸ் நேற்றே அறிவித்துவிட்டார். தேர்தல் முடிவை மெசா ஏற்கவில்லை. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். வாக்கு எண்ணும் நடைமுறைகளை விமர்சித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. 
    Next Story
    ×