search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரான்ஸ் காவல் துறை
    X
    பிரான்ஸ் காவல் துறை

    பிரான்ஸ் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் -அரபி மொழியில் மிரட்டல் வாசகங்கள்

    பிரான்சில் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த மர்ம நபர், அரபி மொழியில் மிரட்டல் வாசகங்களை சுவர்களில் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டின் கடலோர பகுதியில் உள்ள செயின்ட் ரப்பேல் நகரில் தொல்பொருள் அருங்காட்சியகம் உள்ளது.  வரலாற்று நினைவுச்சின்னமான இந்த அருங்காட்சியகத்தில் மெடிவல் கற்களால் (இடைக்கால கற்கள்) கட்டப்பட்ட தேவாலயம் மற்றும் ரோமானிய வரலாற்றில் பயன்படுத்தப்பட்ட ஏராளமான ஆம்போராக்கள் (பழங்கால ஜாடிகள்) மற்றும் அரிய பொருட்கள் உள்ளன. 

    இந்த அருங்காட்சியகத்திற்குள் நேற்று இரவு மர்ம மனிதன் ஒருவன் நுழைந்துள்ளான். அருங்காட்சியகத்தின் சுவர்களில் அரபி மொழியில் மிரட்டும் தொனியில் வாசகங்களை எழுதியுள்ளான். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அருங்காட்சியகத்தை சுற்றி வளைத்தனர். ஆனால் உள்ளே உள்ள மர்ம மனிதன் போலீசாருடன் தொடர்பு கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது.

    அந்த மர்ம மனிதன் ஆயுதங்கள் ஏதும் வைத்துள்ளனா ? உள்ளே வேறு யாரும் உள்ளனரா என்பது குறித்து போலீசார் தரப்பில் தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. 

    அரபி மொழியில் எழுதப்பட்ட வாசகங்களில் ஒன்றில் ‘இந்த அருங்காட்சியகம் நரகமாக மாறப்போகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியிலுள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அருங்காட்சியகத்திற்குள் நுழைந்து மிரட்டல் வாசகங்களை எழுதியுள்ளது பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×