search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இம்ரான் கானுடன் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட்
    X
    இம்ரான் கானுடன் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட்

    பிரிட்டனுக்கு பாகிஸ்தான் மிக முக்கியமான நாடு - இளவரசர் வில்லியம்

    பிரிட்டன் அரசுக்கு பாகிஸ்தான் மிகவும் முக்கியமான நாடாகும் என கேம்பிரிட்ஜ் இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் இருவரும் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக கடந்த திங்கள் கிழமை பாகிஸ்தான் வந்தனர்.

    சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று இஸ்லாமாபாத்தில் உள்ள பெண்கள் பள்ளிக்குச் சென்று அங்குள்ள குழந்தைகள் உடன் விளையாடி மகிழ்ந்தனர். 

    இதையடுத்து இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இருவரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்தனர். பிரதமர் இல்லத்தில் அரச தம்பதிகளுக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமரும் இளவரசரும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதித்தனர். 

    பாகிஸ்தானில் நேர்மறையான நடவடிக்கைகளை ஊக்குவித்ததற்காகவும், இளம் பாகிஸ்தானியர்களுடனான நல்ல அணுகுமுறைகளுக்காகவும் அரச தம்பதியரை பிரதமர் இம்ரான் கான் பாராட்டினார். உள்நாட்டு முன்னுரிமைகள் மற்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததை தொடர்ந்து இந்தியாவுடனான உறவுகள் குறித்து இளவரசரிடம் விளக்கினார். 

    பின்பு, இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தானின் தேசிய நினைவுச்சின்ன பகுதியில் உள்ள ஒரு மலையடிவாரத்தில் பிரிட்டிஷ் தூதரகம் நடத்திய வரவேற்பு நிகழ்ச்சியில் அரச தம்பதிகள் கலந்து கொண்டனர்

    அரச தம்பதிகள் ஆட்டோவில் வந்து இறங்கிய காட்சி

    நிகழ்ச்சியில் இளவரசர் வில்லியம் பேசியதாவது:-

    அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பல் வழங்கியதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு  நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பிரிட்டனில் பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட  1.5 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். பாகிஸ்தானின் சிறந்த முதலீட்டாளர்களில் பிரிட்டனும் ஒன்று. மேலும் பிரிட்டனுக்கு பாகிஸ்தான் மிக முக்கிய நாடாகும். 

    பிரிட்டன் மற்றும் பாகிஸ்தான் தனித்துவமான ஒப்பந்தங்களை பகிர்ந்து கொள்கின்றன. எனவே பாகிஸ்தான் நாடு முன்னேற்றம் காண எப்போதும் பிரிட்டன் உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×