search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வீடியோ: லாகூரிலிருந்து அமெரிக்காவுக்கு ரெயில் சேவையா? பாகிஸ்தான் ரெயில்வே துறையை கலாய்க்கும் டுவிட்டர் வாசிகள்

    பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு ரெயில் செல்வதாக குறிக்கப்பட்டிருந்த பெயர் பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
    இஸ்லாமாபாத்:

    அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு அந்நாட்டிற்கு செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா செல்வதற்கான விசா பெறுவதிலும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் இருந்து நேரடியாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு ரெயில் இயங்குவது போன்று சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.

    பாகிஸ்தானின் லாகூரில் இருந்து புறப்பட்ட ஒரு ரெயில் அந்நாட்டின் சுக்கூர் நிலையத்திற்கு வந்தது. அப்போது அந்த ரெயிலில் உள்ள மின்னணு பெயர்ப் பலகையில் ரெயில் சேருமிடம் லாஸ் ஏஞ்சல்ஸ் என திரையிடப்பட்டிருந்தது.

    ரெயிலில் லாஸ் ஏஞ்சல்ஸ் என பெயரிடப்பட்ட மின்பலகை

    அந்த ரெயிலின் மின்னணு பெயர்ப் பலகையை வீடியோ எடுத்த பயணிகள் சிலர் அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இதையடுத்து சமூக வலைதளவாசிகள் பாகிஸ்தான் ரெயில்வே துறையை சரமாரியாக கலாய்த்து வருகின்றனர்.

    இது குறித்து டுவிட்டர் வாசிகள் சிலர் கூறியதாவது:

    பாகிஸ்தான் ரெயில்வே துறை மிகவும் முன்னேறிவிட்டது. ஏனென்றால் தற்போது லாகூரில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு ரெயில் செயல்பாட்டில் உள்ளது. இது பிரதமர் இம்ரான்கானின் மிகப்பெரிய சாதனை. அடுத்து என்ன? இஸ்லாமாபாத்தில் இருந்து ஜப்பான் மற்றும் ஜெர்மனிக்கு ரெயில்கள் இயக்கப்படுமா? என ஒருவர் கேளிக்கையாக கேள்வி  எழுப்பியுள்ளார்.    

    பாகிஸ்தான் ரெயில்வே லாகூரில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு ரெயில் சேவையை தொடங்கியுள்ளது. கூடிய விரைவில் ரெயில்வே துறை மந்திரியும், அறிவியல் தொழில்நுட்பத்துறை மந்திரியும் இணைந்து சந்திரனுக்கு ரெயில் விட உள்ளனர்.  என மற்றுமொரு சமூகவலைதளவாசி தெரிவித்துள்ளார்.



    பாகிஸ்தான் ரெயில்வே நிர்வாகம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் செயல்பாட்டில் இருந்த ஒரு ரெயிலின் மின்பெயர் பலகையை வாங்கியுள்ளது. ஆனால் அந்த பெயர்ப் பலகையில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற பெயரை எவ்வாறு நீக்குவது என பாகிஸ்தானுக்கு தெரியவில்லை என மற்றுமொரு வலைதளவாசி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பாகிஸ்தான் ரெயில்வே துறை மந்திரி ஹேக் ரஷித் கூறுகையில், ''ரெயிலில் உள்ள மின்னணு பெயர்ப் பலகையில் லாஸ் ஏஞ்சல்ஸ் என பதிவான விவகாரத்தில் மக்கள் குறும்புத்தனமாக செயல்படுகின்றனர். மேலும், இது கணிணிமயமாக்கப்பட்ட பெயர்ப் பலகை. ஒருவேளை இறைவன் விரும்பினால் எங்கள் ரெயில்வே துறை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு ரெயிலை இயக்கும்’’ என தெரிவித்தார்.
    Next Story
    ×