search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜான் பி. குட்எனாஃப், ஸ்டான்லி விட்டிங்ஹாம் மற்றும் அகிரா யோஷினோ
    X
    ஜான் பி. குட்எனாஃப், ஸ்டான்லி விட்டிங்ஹாம் மற்றும் அகிரா யோஷினோ

    வேதியியல் துறைக்கான நோபல் பரிசு : 3 விஞ்ஞானிகள் பகிர்வு

    மேம்படுத்தப்பட்ட லித்தியம்-அயன் பேட்டரியை கண்டுபிடித்ததற்காக விஞ்ஞானிகள் 3 பேருக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஸ்டாக்ஹோம்:

    மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. 

    இந்நிலையில், 2019-ம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது. 

    நோபள் பரிசு

    அதன்படி விஞ்ஞானிகள் ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜான் பி. குட்எனாஃப், அகிரா யோஷினோ ஆகியோர் இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    மேம்படுத்தப்பட்ட லித்தியம்-அயன் பேட்டரியை கண்டுபிடித்ததற்காக விஞ்ஞானிகள் 3 பேருக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×