search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனா மருத்துவமனையில் தீ விபத்து (மாதிரிப் படம்)
    X
    சீனா மருத்துவமனையில் தீ விபத்து (மாதிரிப் படம்)

    சீனாவில் மருத்துவமனையில் தீ விபத்து - 5 பேர் உடல் கருகி பலி

    சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
    பீஜிங்:

    சீனா நாட்டின் அன்குய் மாகாணத்தில் உள்ளது போசோவ் நகர். போசோவ் நகரின் குயாங் கவுண்டியில் உள்ள ஒரு டவுன்ஷிப் சுகாதார மையத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து, விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி தீயை கட்டுப்படுத்தினர். பின்னர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

    இதுவரை 5 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    Next Story
    ×