search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாய்லாந்தில் அருவியில் இருந்து விழுந்த யானைகள் உயிரிழப்பு
    X
    தாய்லாந்தில் அருவியில் இருந்து விழுந்த யானைகள் உயிரிழப்பு

    தாய்லாந்தில் அருவியில் இருந்து விழுந்து 6 யானைகள் பலி

    தாய்லாந்தில் அருவியில் இருந்து விழுந்து குட்டியானை உள்பட மொத்தம் 6 யானைகள் பாறைகளில் மோதி பரிதாபமாக உயிரிழந்தது.
    பாங்காக்:

    தாய்லாந்தில் காவோ யாய் தேசிய பூங்கா உள்ளது. பெரும் காடான இங்கு யானைகள் உட்பட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்தப் பூங்காவிற்குள் ஹயூ நரோக் என்ற அருவி உள்ளது.

    நேற்று முன்தினம் காலை இந்த அருவியின் அருகே யானை கூட்டம் உலாவிக்கொண்டிருந்தது. அப்போது 3 வயதான குட்டியானை அருவியில் இருந்து தவறி விழுந்தது.

    இதையடுத்து, குட்டியானையை காப்பாற்றும் முயற்சியில் அடுத்தடுத்து 5 யானைகள் அருவியில் இருந்து விழுந்தன. கூட்டத்தில் இருந்த 2 யானைகள் மட்டும் என்னசெய்வதென்று அறியாமல் திகைத்து போய் நின்றுக் கொண்டிருந்தன.

    இதற்கிடையே யானைகள் பிளிறும் சத்தம் கேட்டு பூங்கா ஊழியர்கள் அருவியின் கீழே சென்று பார்த்தனர். அப்போது குட்டியானை உள்பட மொத்தம் 6 யானைகள் பாறைகளில் மோதி செத்து கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து, அருவிக்கு அருகே தவித்துக்கொண்டிருந்த 2 யானைகளை ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர். இந்த யானைகள் மனரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கு முன் கடந்த 1992-ம் ஆண்டு இதே அருவியில் இருந்து விழுந்து 8 யானைகள் பலியான சம்பவம் தாய்லாந்தில் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது நினைவுகூரத்தக்கது.
    Next Story
    ×