search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தான் ராணுவம் (கோப்புப்படம்)
    X
    ஆப்கானிஸ்தான் ராணுவம் (கோப்புப்படம்)

    ஆப்கானிஸ்தான்: ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் 13 பயங்கரவாதிகள் பலி

    ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய திடீர் தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகள் 13 பேர் கொல்லப்பட்டனர்.
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் பல பகுதிகளை தலிபான் பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மேலும், தங்களுக்கு கட்டுப்படாத மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர். பயங்கரவாதிகளை அழிக்கும் பணியில் உள்நாட்டுப்படைகளும், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளும் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் அரசுப்படைகளுக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடைபெற்றுவருகிறது. மேலும், பங்கரவாதிகள் ராணுவம் மற்றும் பொது மக்களை குறிவைத்து தற்கொலை படை தாக்குதல், குண்டுவெடிப்பு சம்பவங்களை அரங்கேற்றிவருகின்றனர்.

    பயங்கரவாதிகள் (கோப்புப்படம்)

    இந்நிலையில், அந்நாட்டின் தஹேர் மாகணத்தில் உள்ள பஹராக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் ராணுவத்தினர் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த திடீர் தேடுதல் வேட்டையில் மறைவிடத்தில் பதுங்கியிருந்த 13 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
    Next Story
    ×