search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டக்காரர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸ்
    X
    போராட்டக்காரர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸ்

    ஹாங்காங்: போராட்டக்காரர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸ்

    ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபட்ட நபர் மீது போலீஸ் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    ஹாங்காங்:

    ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது.

    இந்த சட்ட திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் மசோதா கைவிடப்பட்டது. ஆனாலும், ஹாங்காங்கின் தன்னாட்சியில் சீனா தலையிடுவதை நிறுத்த வேண்டும் என கூறி நான்கு மாதங்களக போராட்டம் நடைபெற்றுவருகிறது.

    இதற்கிடையில், சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் 70-ம் ஆண்டு கொண்டாட்டங்கள் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆனால் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் போராட்டம் வெடித்தது. பல்லாயிரக்கணக்கானோர் முகமூடி அணிந்து கொண்டு சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

    துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர்

    போராட்டக்காரர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தி சுட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சங் சி கின் (18) என்ற இளைஞர் மீது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ் தனது துப்பாக்கியால் சுட்டார். போலீஸ் சங் சி கின்னுக்கு மிக அருகில் இருந்த போலீஸ் சுட்டதில் ரப்பர் தோட்டா அவரது மார்பில் பாய்ந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார். இதையடுத்து சங் சி கின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபாட்ட சங் சி கின் மீது வன்முறையில் ஈடுட்டதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் போராட்டக்காரர்களிடையே பெருத்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங் போராட்டக்காரர் மீது போலீசார் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×