search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜப்பானில் கனமழை
    X
    ஜப்பானில் கனமழை

    மிடாக் புயல் எதிரொலி - ஜப்பானில் 43000 மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    மிடாக் புயல் காரணமாக ஜப்பானில் கனமழை பெய்து வரும் நிலையில், 43,000 மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    டோக்கியோ:

    மிடாக் புயல் காரணமாக, ஜப்பான் வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உ ருவாகி, கனமழை பெய்து வருகிறது. கனமழை மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கொச்சி மாகாணத்தில் 43000 மக்கள் ஊரைவிட்டு வெளியேறுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஜப்பானின் உள்ளூர் தொலைக்காட்சி சேனலின் தகவலின் படி, கொச்சி, டோசா மற்றும் சுசாகி ஆகிய நகரங்களில் 120 மில்லிமீட்டர் (12 செமீ) மழை பதிவானது, மேலும் கார்கள் மூழ்கும் அளவிற்கு வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

    கனமழை காரணமாக ஏற்படும் நிலச்சரிவு , வெள்ளம் தொடர்பான விபத்துகளில் இருந்து மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஜப்பான் அரசு எடுத்து வருகிறது.

    Next Story
    ×