search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோத்தபய ராஜபக்சே
    X
    கோத்தபய ராஜபக்சே

    கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான வழக்கில் நாளை விசாரணை

    குடியுரிமை பிரச்சினை தொடர்பான கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான வழக்கில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.
    கொழும்பு:

    இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ந்தேதி நடக்கிறது. அதில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பியும், முன்னாள் பாதுகாப்பு ஆலோசகருமான கோத்தபய ராஜபக்சே போட்டியிடுகிறார். ராஜபக்சே கட்சியின் வேட்பாளராக அவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

    இதற்கிடையே, அவர் இலங்கை குடிமகன் அல்ல, அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்றும், அவரது இலங்கை குடியுரிமை சான்றிதழ் போலியாக உருவாக்கப்பட்டதாகவும் இலங்கை மேல்முறையீட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இலங்கை அரசியல் சட்டப்படி, அந்நாட்டு குடிமகன் மட்டுமே அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். கோத்தபய, தேர்தலில் போட்டியிட தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

    இந்த மனுவை நாளையும் (புதன்கிழமை), நாளை மறுநாளும் (வியாழக்கிழமை) விசாரிப்பதாக மேல்முறையீட்டு கோர்ட்டு நேற்று அறிவித்தது. தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் கோரிக்கை பற்றியும் கோர்ட்டு விசாரிக்கிறது.
    Next Story
    ×