search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மா சே துங்கின் பதப்படுத்தப்பட்ட உடல்
    X
    மா சே துங்கின் பதப்படுத்தப்பட்ட உடல்

    சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் 70-வது ஆண்டு விழா - மாசேதுங் உடலுக்கு ஜி ஜின்பிங் மரியாதை

    சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் 70 ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மா சே தூங்கின் பதப்படுத்தப்பட்ட உடலுக்கு அதிபர் ஜி ஜின்பிங் இன்று மரியாதை செலுத்தியுள்ளார்.
    பிஜீங்:

    சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருகிறது. கம்யூனிச சித்தாந்தம் முறையிலான ஆட்சியை சீனாவில் முதன் முதலில் மா சே துங் அறிமுகப்படுத்தினார். சீன மக்கள் குடியரசு என்ற பெயரில் கட்சி தொடங்கிய மாசேதுங் 1949 முதல் 1976 வரை 47 ஆண்டுகள்  அதிபராக பதவி வகித்தார். 

    1976-ம் ஆண்டு மா சே துங் உயிரிழந்த பின்னர் அவரது உடல் தைலத்தால் பதப்படுத்தப்பட்ட நிலையில் பிஜீங் நகரில் உள்ள  டைனமென் சதுக்கத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    சீன அதிபர் ஜி ஜின்பிங் மரியாதை செலுத்தும் காட்சி
    இந்நிலையில், கம்யூனிச ஆட்சி முறையில் சீனாவில் அறிமும் செய்யப்பட்டதன் 70-வது ஆண்டு விழா அந்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டைனமென் சதுர்க்கத்தில் வைக்கப்பட்டுள்ள மா சே துங் உடலுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று மரியாதை செலுத்தினார். அதிபருடன் இணைந்து அரசு நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் சக அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
    Next Story
    ×