search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஜாக் சிராக்
    X
    பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஜாக் சிராக்

    பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஜாக் சிராக் காலமானார்

    பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஜாக் சிராக் உடல்நலக்குறைவின் காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 86.
    பாரிஸ்:

    பிரான்ஸ் நாட்டின் அரச தலைவராக இருந்தவர் முன்னாள் அதிபர் ஜாக் சிராக்.  1995 மற்றும் 2002 ஆண்டுகளில் அரச தலைவராக பணியாற்றியுள்ளார். 1974-76 மற்றும் 1986-88 காலகட்டத்தில் பிரான்ஸ் நாட்டின் அதிபராக பணியாற்றியுள்ளார். மேலும் 1977 முதல் 1995 வரை பாரிஸ் நகர மேயராகவும் பணியாற்றியுள்ளார்.  இவர் பிரான்சின் மிக நீண்ட காலம் பணியாற்றிய இரண்டாவது ஜனாதிபதி ஆவார். கடந்த 2011 ம் ஆண்டு  நிதி மோசடி வழக்கில் சிக்கினார்.

    கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவின் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், இன்று காலை ஜாக் சிராக் காலமானார்.  இந்த செய்தியை அவரது மருமகன் பிரடெரிக் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

    Next Story
    ×