search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    சமூக வலைத்தளங்களில் தகவல்களை சரிபார்த்த பிறகே பகிர வேண்டும் - பிரதமர் மோடி அறிவுறுத்தல்

    சமூக வலைத்தளங்களில் தகவல்களை சரிபார்த்த பிறகு அதை மற்றவர்களுக்கு பகிர வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
    நியூயார்க்:

    பிரதமர் மோடி அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நேற்று நடைபெற்ற உலகளாவிய வர்த்தக கூட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமூக வலைத்தளங்கள், சக்திவாய்ந்த ஜனநாயக சாதனமாக மாறி இருக்கின்றன. இந்த சாதனங்களை நல்லாட்சிக்கான நல்ல ஆயுதமாக ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாம். நான் நீண்ட காலமாக சமூக வலைத்தளங்களில் தீவிர பங்காற்றி வருகிறேன். குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்தபோது, சமூக வலைத்தளத்தில் வந்த விபத்து பற்றிய செய்தியை பார்த்து, அரசு எந்திரத்தை முடுக்கி விட்டேன். வெள்ள பாதிப்பின்போது, நடவடிக்கை எடுக்க பயன்படுத்திக்கொண்டேன். இதற்காக முறைப்படி அறிக்கை விட வேண்டியது இல்லை.

    நல்ல ஆட்சி நடத்த விரும்பும் ஒரு அரசு, தகவல்களை கொண்டு சேர்ப்பதற்கு சமூக வலைத்தளங்கள் ஒரு நல்ல கருவி ஆகும். அதே சமயத்தில், அவற்றில் வரும் தகவல்களை பகிர்வது பிரச்சினையை உண்டாக்குகிறது. எனவே, வரும் தகவல்களை சரிபார்த்த பிறகு அதை மற்றவர்களுக்கு பகிர வேண்டும். சரிபார்ப்பதற்கு தொழில்நுட்பரீதியாக வசதி செய்யப்பட வேண்டும்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
    Next Story
    ×