search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்கலத்துடன் சீறிப்பாய்ந்த ராக்கெட்
    X
    சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்கலத்துடன் சீறிப்பாய்ந்த ராக்கெட்

    5.3 டன் பொருட்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டது ஜப்பான் விண்கலம்

    ஜப்பானில் இருந்து, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்கு 5.3 டன் எடையுள்ள பொருட்கள், விண்கலம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    டோக்கியோ:

    அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து, விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. இங்கு சுழற்சி முறையில் விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு தேவையான பொருட்கள்  விண்கலம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

    அவ்வகையில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ‘கோனோட்டரி 8’ என்ற மிகப்பெரிய ஆளில்லா விண்கலம் மூலம் பொருட்களை அனுப்ப ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டது.

    இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 11-ம் தேதி தனேகாஷிமா தீவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்கலத்தை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் திட்டம் தள்ளி வைக்கப்பட்டது.

    சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்ற ஜப்பான் விண்கலம்

    இந்நிலையில், பிரச்சினை சரிசெய்யப்பட்ட நிலையில், சர்வதேச விண்வெளி மையத்திற்கு இன்று ஆளில்லா விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 1.05 மணிக்கு எச்2பி ராக்கெட் மூலம் இந்த சரக்கு விண்கலம் ஏவப்பட்டுள்ளது.

    இந்த விண்கலத்தில் விண்வெளி வீரர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பேட்டரிகள், ஆய்வுக்கு தேவையான உபகரணங்கள் என 5.3 டன் எடையுள்ள பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×