search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போரிஸ் ஜான்சன்
    X
    போரிஸ் ஜான்சன்

    பாராளுமன்றத்தை முடக்கிய பிரதமரின் முடிவு சட்டவிரோதமானது - பிரிட்டன் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

    பிரிட்டன் பாராளுமன்றத்தை முடக்குமாறு ராணிக்கு பரிந்துரை செய்யும் பிரதமரின் முடிவு சட்ட விரோதமானது என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
    லண்டன்:

    ஐரோப்பியன் கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்தது. இதற்கான வாக்கெடுப்பில் மக்கள் வெளியேற ஆதரவு தெரிவித்தனர். ஆனால், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற முடியாமல் சிக்கலை சந்தித்து வருகிறது.

    வரும் அக்டோபர் 31-ம் தேதி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவது உறுதி என சமீபத்தில் பொறுப்பேற்ற பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    இதற்கிடையே, அக்டோபர் மாதம் 14-ம் தேதி வரை பிரிட்டன் பாராளுமன்றத்தை முடக்கி வைக்க வேண்டும் என ராணி எலிசபெத்துக்கு அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று ராணி எலிசபெத், பிரிட்டன் பாராளுமன்றத்தை அக்டோபர் 14-ம் தேதி வரை முடக்கி வைக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

    பிரிட்டன் சுப்ரீம் கோர்ட்

    இதைத்தொடர்ந்து, பிரிட்டன் பாராளுமன்றத்தை ஒத்திவைக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சன் முடிவை எதிர்த்து லண்டன் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது. இதையடுத்து, பிரெக்சிட்டுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கினா மில்லர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாராளுமன்றத்தை முடக்குமாறு ராணிக்கு பரிந்துரை செய்யும் பிரதமரின் முடிவு சட்ட விரோதமானது என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பிரிண்டா ஹலே தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 

    மேலும், பிரதமரின் முடிவுப்படி பாராளுமன்றம் முடக்கப்படவில்லை என இன்று தீர்ப்பளித்த 11 நீதிபதிகளும், ஒருமனதாக தீர்மானித்துள்ளனர். எனவே, பிரதமரின் முடிவு செல்லாது. இனி என்ன செய்ய வேண்டும் என்பதை பொதுச்சபை மற்றும் பிரபுக்கள் சபையின் சபாநாயகர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்  என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×