search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரான் அதிபர் ரவுகானி
    X
    ஈரான் அதிபர் ரவுகானி

    வளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு வெளிநாட்டு சக்திகளால் அச்சுறுத்தல் - ஈரான் அதிபர் கவலை

    வளைகுடா பிராந்தியத்தை சேர்ந்த மக்களுக்கு வெளிநாட்டு சக்திகள் பிரச்சனைகளை உருவாக்கி, பாதுகாப்பின்மைக்கு காரணமாகி விடலாம் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி குறிப்பிட்டுள்ளார்.
    டெஹ்ரான்:

    சவுதி அரேபியா நாட்டிலுள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோல் கிணறு ஆகியவற்றின்மீது கடந்த 14-ம் தேதி ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதனால், சவுதி அரேபியா நாட்டின் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி சரிபாதியாக குறைந்துள்ளது.

    தீப்பற்றி எரிந்த பெட்ரோல் கிணறு

    இந்த தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என சவுதி அரசும் அமெரிக்காவும் குற்றம்சாட்டி வருகின்றன.இதுபோன்ற தாக்குதல்களில் இருந்து சவுதி அரேபியாவை காப்பாற்ற படைகளை அனுப்பப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

    இந்நிலையில், வெளிநாட்டு சக்திகள் இங்கு காலூன்றினால், வளைகுடா பிராந்தியத்தை சேர்ந்த மக்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கி பாதுகாப்பின்மைக்கு காரணமாகி விடலாம் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி குறிப்பிட்டுள்ளார்.

    ஈரான் ராணுவத்தின் ஆண்டுவிழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய ரவுகானி, ‘உங்களது (வெளிநாட்டு சக்திகளின்) வருகை இந்த பிராந்தியத்துக்கு வலியையும் சோகத்தையும்தான் எப்போதும் தந்துள்ளது.

    எங்களது பிராந்தியம் மற்றும் நாடுகளிடம் இருந்து நீங்கள் எவ்வளவு தூரம் விலகி இருக்கிறீர்களோ.., அந்த அளவுக்கு எங்கள் பிராந்தியம் பாதுகாப்பாக இருக்கும்.

    இந்த வரலாற்று சிறப்புமிக்க முக்கியமான நேரத்தில் எங்களது நட்பு மற்றும் சகோதரத்துவ கரங்களை நீட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம் என அண்டை நாடுகளுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×