search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
    X
    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

    ஈரான் மீது மேலும் பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா

    ஈரான் மீது மேலும் பல பொருளாதார தடைகளை விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், எந்த நாட்டின் மீதும் இதுபோன்ற தடைகள் விதிக்கப்பட்டதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
    வாஷிங்டன்:

    ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டை மீறிய வகையில் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக ஈரான்மீது குற்றம்சாட்டிய அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரான்மீது பொருளாதார மற்றும் வர்த்தக தடையை விதித்தன.

    அந்த தடையை நீக்க வேண்டுமானால் சர்வதேச அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் கண்டுள்ள நிபந்தனைகளை ஈரான் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    ஈரானில் உள்ள அணு உலை

    இந்நிலையில், சர்வதேச அணு ஆயுத பரவல் ஒப்பந்தத்தை அத்துமீறும் வகையில் ஈரான் அரசு 300 கிலோவுக்கும் அதிகமாக செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை கையிருப்பில் வைத்துள்ளதாக ஐ,நா.முகமை கடந்த ஜூலை மாதம் தெரிவித்தது. இதனால், ஈரான் மீது மேலும் பல்வேறு வகையான தடைகளை விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசித்து வந்தார்.

    இந்நிலையில், ஈரான் நாட்டின் மீது மேலும் பல பொருளாதார தடைகளை விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இதற்கு முன்னர் எந்த நாட்டின் மீதும் இதுபோன்ற தடைகள் விதிக்கப்பட்டதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

    அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டொனால்ட் டிரம்ப், 'ஈரான் நாட்டு தேசிய வங்கி மீது தற்போது நாம் தடை விதித்துள்ளோம். அந்நாட்டின் மீது போர் தொடுக்க நான் திட்டமிடவில்லை. அதற்கு மாறாக, மிகவும் சுலபமான வழியில் ஈரானில் உள்ள 15 முக்கிய விவகாரங்கள் மீது தடை விதிக்கப்படும்.

    இதையும் கடந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் இரவல் பெறப்பட்ட நேரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை ஈரான் அரசு உணர வேண்டும்’ என குறிப்பிட்டார்.

    Next Story
    ×