search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இம்ரான்கான் டிரம்ப்
    X
    இம்ரான்கான் டிரம்ப்

    அமெரிக்காவில் 23-ந்தேதி இம்ரான்கான்-டிரம்ப் சந்திப்பு

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை, இம்ரான்கான் வருகிற 23-ந்தேதி நேரில் சந்தித்து பேசுகிறார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்புவார் என தெரிகிறது.
    இஸ்லாமாபா :

    74-வது ஐ.நா. பொதுசபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 24-ந்தேதி முதல், 30-ந்தேதி வரை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்கா செல்கிறார்.

    இந்த பயணத்தின் போது, வருகிற 23-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை, இம்ரான்கான் நேரில் சந்தித்து பேசுகிறார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்புவார் என தெரிகிறது. 
    Next Story
    ×