search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார் குண்டு வெடிப்பு (கோப்பு படம்)
    X
    கார் குண்டு வெடிப்பு (கோப்பு படம்)

    ஆப்கானிஸ்தான்: அமெரிக்கப்படையினர் மீது நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 9 பேர் பலி

    ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படையினர் சென்றுகொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து தலிபான்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஒருசில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு அதை ஆளுமை செய்து வருகின்றனர். மேலும், தங்களுக்கு கட்டுப்படாத பொதுமக்களை இரக்கமின்றி கொன்று குவித்துவருகின்றனர். 

    பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக அந்நாட்டு அரசுடன் இணைந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப் படையினர் தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர்.

    இதற்கிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்கா தலைமையில் தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. ஆனால், தலிபான் உடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டதாக அதிபர் டிரம்ப் சமீபத்தில் தெரிவித்தார்.

    அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தலிபான் பயங்கரவாதிகள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப்படையினர் மீதான தாக்குதல் சம்பவங்களை அதிகப்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் லோகர் மாகாணத்தின் ஹஸ்டர் சந்தை பகுதியில் அமெரிக்கப் படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் அமெரிக்கப் படையினர் 8 பேர் மற்றும் ஒரு குழந்தை உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்திற்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
    Next Story
    ×