search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவி மரணம்
    X
    மாணவி மரணம்

    பாகிஸ்தானில் கல்லூரி விடுதியில் இந்து மாணவி பிணமாக மீட்பு

    பாகிஸ்தானில் மருத்துவக் கல்லூரியின் விடுதியில் இந்து மதத்தைச் சேர்ந்த மாணவி, பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
    கராச்சி:

    பாகிஸ்தானின் கோட்கி டவுன் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்தவர் நம்ரிதா சந்தனி. இவர் இன்று காலை விடுதியில் உள்ள அவரது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

    கல்லூரி நிர்வாகமும், போலீஸாரும் மாணவி தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக கூறியுள்ளனர். ஆனால், மாணவியின் உறவினர்கள் இது  கொலைதான் எனக் கூறி வருகின்றனர். மாணவியின் சகோதரர் விஷால் சுந்தர் கூறுகையில், ‘இது நிச்சயமாக தற்கொலை இல்லை. தற்கொலைக்கான  அடையாளங்கள் கொஞ்சமும் தென்படவில்லை.

    எனது தங்கை வெள்ளை நிற துப்பட்டாவால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறுகின்றனர். ஆனால் அவளின் கழுத்தில் மின் கேபிள் அச்சு இருக்கிறது. கைகளிலும் காயங்கள் உள்ளன. அவருடன் இரண்டு நாட்களுக்கு முன்புக்கூட நான் பேசினேன்.

    விஷால் சுந்தர்

    அவள் மிகவும் புத்திசாலியான மாணவி. நம்ரிதாவின் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை நியாயமான முறையில் விசாரிக்க வேண்டும். பொதுமக்கள், எங்களுக்கு துணையாக நிற்க வேண்டும்’ என கூறினார். விஷால் சுந்தர் மருத்துவராக உள்ளார்.

    கோட்கி டவுன் பகுதியில் அண்மையில் இந்து மதத்தைச் சேர்ந்த பள்ளி முதல்வர் ஒருவர் மதமாற்றம் செய்ய முற்பட்டதாகக் கைது செய்யப்பட்டார். கோட்கியில் இந்து கோயில் ஒன்றும் சூறையாடப்பட்டது. இந்நிலையில், நர்மிதா பிணமாக மீட்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    Next Story
    ×