search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஃபவாத் சௌத்ரி
    X
    ஃபவாத் சௌத்ரி

    2022-ல் விண்வெளிக்கு மனிதரை அனுப்புவோம்: பாகிஸ்தான் மந்திரி

    விண்வெளிக்கு பாகிஸ்தான் வரும் 2022-ம் ஆண்டு மனிதரை அனுப்பி வைக்கும் என அந்நாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    இந்தியா விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் கனவுத் திட்டமான ‘ககன்யான்’ விண்வெளித் திட்டத்தை இஸ்ரோ வரும் 2022ம் ஆண்டு செயல்படுத்த உள்ளது. இந்தியாவின் திட்டத்திற்கு போட்டியாக பாகிஸ்தானும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப உள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தது. 

    இந்நிலையில், இது குறித்து பாகிஸ்தான் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி ஃபவாத் சௌத்ரி கூறியதாவது:

    பாகிஸ்தான் 2022-ம் ஆண்டு சீனாவின் உதவியுடன் மனிதரை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. விண்வெளி செல்லும் வீரருக்கான முதல் கட்ட தேர்வு 2020-ம் ஆண்டு நடத்தப்பட்டு 50 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். 

    பின்னர் 2022-ல் அவர்களில் 25 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும். அவர்களில் இறுதியாக ஒருவர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்பப்படுவார். இந்த பணியில் பாகிஸ்தான் விமானப்படை முக்கிய பங்கு வகிக்கும். 

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×