search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொத்தானை இயக்கி காணொலி மூலம் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி
    X
    பொத்தானை இயக்கி காணொலி மூலம் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

    இந்தியா - நேபாளம் இடையே பைப்லைன் மூலம் பெட்ரோல் வினியோகம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

    இந்தியாவில் இருந்து நேபாளம் நாட்டுக்கு பைப்லைன் மூலம் பெட்ரோலிய பொருட்களை வினியோகம் செய்யும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
    காத்மாண்டு:

    அண்டை நாடான நேபாளத்துக்கு இந்தியாவில் இருந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. இந்த லாரிகள் போக்குவரத்து வாடகைக்காக மட்டும் நேபாளம் அரசின் பெட்ரோலிய நிறுவனம் ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய் அளவுக்கு செலவிட்டு வந்தது.

    இந்த செலவினத்தை குறைக்கும் வகையில் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள மோட்டிஹாரி பகுதியில் இருந்து நேபாளம் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள அம்லேகஞ்ச் நகருக்கு 69 கிலோமீட்டர் தூரத்துக்கு பூமிக்கு அடியில் குழாய்களை பதித்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை அனுப்ப கடந்த 1996-ம் ஆண்டில் திட்டம் தீட்டப்பட்டது.

    காணொலி மூலம் உரையாற்றும் நேபாளம் பிரதமர்

    குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில் மோட்டிஹாரி-அம்லேக்கஞ்ச் பெட்ரோலிய பைப்லைன் திட்டத்தை டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியும் காத்மாண்டு நகரில் இருந்து நேபாளம் பிரதமர் சர்மா ஒலியும் இன்று காணொலி மூலம் கூட்டாக தொடங்கி வைத்தனர்.

    தெற்காசியா கண்டத்தில் பைப்லைன் மூலம் இரு நாடுகளுக்கு இடையில் பெட்ரோல் வினியோகம் செய்யும் முதல் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×