search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதின்
    X
    புதின்

    இந்தியா, ரஷியா கூட்டாக கப்பல் கட்ட வாய்ப்பு - புதின் தகவல்

    இந்தியாவும், ரஷியாவும் இணைந்து கூட்டாக கப்பல் கட்டும் தொழிலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக புதின் தெரிவித்துள்ளார்.
    விலாடிவோஸ்டோக்:

    ரஷியாவின் விலாடிவோஸ்டோக் நகரில், நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் புதின் பங்கேற்றார். அதில் புதின் பேசியதாவது:-

    நேற்று (நேற்று முன்தினம்) பிரதமர் மோடியுடன் பேசினேன். இந்தியாவும், ரஷியாவும் இணைந்து கூட்டாக கப்பல் கட்டும் தொழிலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம். சில கப்பல்களை நாங்கள் இணைந்து உருவாக்க வாய்ப்புள்ளது. கப்பல்களில் பகுதி அளவுக்கு ரஷியா கட்டும். அதை மெருகேற்றும் பணியை இந்திய கப்பல் கட்டும் தளங்கள் செய்யும்.

    இந்தியாவின் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றை ரஷியாவின் ரோஸ்நெட் நிறுவனம் வாங்கி உள்ளது. இதுபோல், ஒத்துழைப்புக்கான துறைகள் நிறைய உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×