search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்தார்பூரில் உள்ள சீக்கிய குருத்வாரா
    X
    கர்தார்பூரில் உள்ள சீக்கிய குருத்வாரா

    இந்தியாவில் இருந்து சீக்கிய யாத்ரீகர்கள் வருவதற்கு விசா இல்லாமல் அனுமதி - பாகிஸ்தான் அறிவிப்பு

    இந்தியாவில் இருந்து கர்தார்பூர் பாதை வழியாக சீக்கிய ஆலயத்துக்கு வரும் யாத்ரீகர்கள் விசா இல்லாமல் நுழைவதற்கு பாகிஸ்தான் அரசு இன்று அனுமதி அளித்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 500 ஆண்டுகள் பழமையான குருத்வாரா உள்ளது. அங்கு சீக்கியர்கள் புனித பயணம் செல்வது வழக்கம்.

    அதற்காக, அங்கிருந்து இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் ஆலயம்வரை பாதை அமைக்க இந்தியாவும், பாகிஸ்தானும் முடிவு செய்தன. அதன்படி, இரு நாடுகளும் அவரவர் பகுதியில் பாதை அமைத்துள்ளன.
     
    சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ் 550-வது பிறந்தநாள் நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் வருவதற்காக, கர்தார்பூர் பாதையை திறந்து விடத்தயார் என்று பாகிஸ்தான் அறிவித்திருந்தது.

    கர்தார்பூர் ஆலயத்தின் முன்னால் இளைப்பாரும் சீக்கிய பக்தர்கள்

    கர்தார்பூர் பாதை வழியாக இந்தியாவில் இருந்து வரும் பக்தர்களுக்கு விசா அளிக்கும் நடைமுறைகள் இம்மாதம் 30-ம் தேதிக்குள் முடிவடையும் என பாகிஸ்தான் அரசு முன்னர் அறிவித்திருந்தது. அன்றாடம் 5 ஆயிரம் இந்திய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்தியாவில் இருந்து கர்தார்பூர் பாதை வழியாக சீக்கிய ஆலயத்துக்கு வரும் யாத்ரீகர்கள் விசா இல்லாமல் வருவதற்கு பாகிஸ்தான் அரசு இன்று அனுமதி அளித்துள்ளது. இருநாடுகளின் வெளியுறவுத்துறை இணை செயலாளர்கள் மட்டத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

    வெளிநாடுகளில் வாழும் இந்தியாவை சேர்ந்த சீக்கிய யாத்ரீகர்களும் விசா இன்றி தரிசனத்துக்கு வருவதற்கு அனுமதி அளிக்கபடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், யாத்திரைக்காக வரும் சீக்கீயர்களுக்கு சுமார் 20 டாலர்கள் வரை நுழைவு கட்டணம் வசூலிக்க பாகிஸ்தான் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை தொடர்பாக இன்றுவரை சுமுகமான முடிவு ஏதும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
     
    Next Story
    ×