search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதினுடன் மோடி
    X
    புதினுடன் மோடி

    ரஷிய அதிபர் புதினுடன் கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்டார் மோடி

    அரசுமுறை பயணமாக ரஷியா வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அதிபர் விளாடிமிர் புதினுடன் விளாடிவாஸ்டோக் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்டார்.
    மாஸ்கோ:

    அரசுமுறை பயணமாக ரஷியா வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அதிபர் விளாடிமிர் புதினுடன் விளாடிவாஸ்டோக் நகரில் உள்ள  கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்டார்.

    ரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டம் நடக்கிறது.  ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பின்பேரில், அக்கூட்டத்தில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடி ரஷ்யா வந்து சேர்ந்தார்.

    விளாடிவோஸ்டோக் விமான நிலையத்தில் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மரியாதையுடன் மோடிக்கு  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  இந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்ற மோடி, அங்கிருந்து கிழக்கு மத்திய பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கு வாழும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் மோடிக்கு சிறப்பான முறையில்  வரவேற்பு அளித்தனர். 

    ரஷியாவில் வாழும் இந்தியர்கள் அளித்த வரவேற்பு

    பின்னர், அதிபர் விளாடிமிர் புதினுடன் விளாடிவாஸ்டோக் நகரில் உள்ள சுவேஸ்டா கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்டார்.

    அப்போது மரபுகளை கடந்து தன்னுடன் இந்த கப்பல் கட்டும் தளத்துக்கு வந்து சுற்றிக்காட்டிய ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, அவரை கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
    Next Story
    ×