search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரான் விண்வெளி மையம்
    X
    ஈரான் விண்வெளி மையம்

    ஈரான் விண்வெளி மையத்திற்கு பொருளாதார தடை- அமெரிக்கா அதிரடி

    சட்ட விரோதமாக அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக ஈரான் விண்வெளி மையத்திற்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
    வாஷிங்டன்:

    ரஷ்யா, பிரான்ஸ், சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் ஈரான் கடந்த 2015 ஆம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் 
    செய்தது. ஆனால் கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா திடீரென விலகியது. 

    இதைத்தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. அதற்கு பதிலடியாக, எண்ணெய் வர்த்தக போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியில் தடை ஏற்படுத்துவோம் ஈரான் மிரட்டியது. இதானல் இரு நாடுகள் இடையே பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது.

    கடந்த வியாழக்கிழமை ஈரான் விண்வெளி மையத்திலிருந்து ராக்கெட் ஒன்று வெடித்தது. இந்த சம்பவம் மற்ற நாடுகளுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் ஈரான் அதிகாரிகள் தெரிவிக்கையில் சோதனையின் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் வெடித்தது என தெரிவித்தனர். 

    இந்நிலையில், செயற்கைகோள் திட்டத்தின் கீழ் ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி, ஈரான் விண்வெளி மையத்திற்கு அமெரிக்கா கருவூலத்துறை பொருளாதார தடைகளை விதித்துள்ளது. 

    இந்த பொருளாதாரத் தடைகள் மூலம், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சர்வதேச விண்வெளி ஒத்துழைப்பு அமைப்புகள் உள்ளிட்ட அமைப்புகள் ஈரானிய விண்வெளி நிறுவனத்துடன் ஏதேனும் தொடர்பு கொண்டிருந்தால், அவர்கள் மீது குறிப்பிடத்தக்க அபராதங்களை டிரம்ப் நிர்வாகம் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    Next Story
    ×