search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதிரிப் படம்
    X
    மாதிரிப் படம்

    புளோரிடா மாநிலத்தை மிரட்டும் டொரியன் புயல்- திங்கட்கிழமை கரை கடக்கும்

    டொரியன் புயல் வரும் திங்கட்கிழமையன்று அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கரையை கடக்கும் என தேசிய புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
    வாஷிங்டன்:

    கரீபியன் தீவுகள் அருகே டொரியன் புயல் மையம் கொண்டிருந்தது. அங்கிருந்து நேற்று முன்தினம் நகரத் தொடங்கியதால், போர்டோ ரிகோ, வெர்ஜின் தீவுகள் போன்ற இடங்களில் கடும் மழையும் காற்றும் சுழன்றடித்தது. 

    இந்நிலையில் சக்திவாய்ந்த டொரியன் புயல் புளோரிடா மாநிலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக தேசிய புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இது வரும் திங்களன்று மதியம் 2 மணிக்கு மத்திய புளோரிடாவில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புளோரிடாவின் 26 மாவட்டங்களுக்கு அந்த மாகாண ஆளுநர் ரோன் டிசன்டிஸ், புயல் எச்சரிக்கை விடுத்துள்ளார். கரையை கடக்கும் போது மத்திய புளோரிடாவில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் அமெரிக்காவின் ஜார்ஜியாவிலும் 12 மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புளோரிடாவிலிருந்து தெற்கு மற்றும் வட கரோலினா வரை, மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகள் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    வரவிருக்கும் நாட்களில் டொரியன் புயலின் வலிமை அதிகரிக்கும், மேலும் இது வார இறுதியில் பஹாமாஸின் சில பகுதிகளையும் புளோரிடாவின் பெரும்பகுதியையும் பாதிக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது,

    இந்நிலையில் அரசுமுறை பயணமாக போலந்து செல்லவிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். டொரியன் மிகவும் சக்திவாய்ந்த புயல் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புயல் எச்சரிக்கை ஏற்பாடுகள் சரியாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை கவனிக்க நாட்டிலேயே இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு பதிலாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் போலந்துக்கு செல்லவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×