search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    ஆப்கானிஸ்தானில் 37 தலிபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

    ஆப்கானிஸ்தான் நாட்டின் பாக்டிகா மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 37 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.
    ஷாரன்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் பாக்டிக் மாகாணத்தில் உள்ள மதா கான் மற்றும் சம்ரத் மாவட்டங்களை இணைக்கும் சாலையில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடிகளை தலிபான் தீவிரவாதிகள் நேற்று இரவு தாக்கினர். இதையடுத்து பாதுகாப்பு படைகள் எதிர்த்தாக்குதல் நடத்தினர். இதில் 37 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் தலிபானின் முக்கிய கமாண்டரான மூசா கான் என்பவரும் அடங்குவார்.

    இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ஏழு மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் ஒரு பாதுகாப்பு படை வீரர் காயமடைந்தார். 37 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தலிபான் பயங்கரவாதிகள், பாக்டிகா மாகாணத்தில் உள்ள மலைப்பிரதேசத்தின் சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ளனர், கரடுமுரடான நிலப்பரப்புகளையும் மலைகளையும் மறைவிடங்களாகப் பயன்படுத்தி பாதுகாப்புப் படையினருக்கு எதிராக அடிக்கடி தாக்குதல்களை நடத்துகிறார்கள் என தெரிவித்தனர்.
    Next Story
    ×