search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லியோனார்டோ டி காப்ரியோ
    X
    லியோனார்டோ டி காப்ரியோ

    அமேசான் காடுகளை பாதுகாக்க லியோனார்டோ டி காப்ரியோ ரூ.35 கோடி நிதி

    அமேசான் காடுகளை பாதுகாக்க ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டி காப்ரியோ ரூ.35 கோடி நிதியாக வழங்கியுள்ளார்.
    வாஷிங்டன்:

    உலகின் மிகப்பெரிய இயற்கை காடாக விளங்குவது அமேசான் மழைக்காடுகள். இந்த காடுகள் உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணக்கிடைக்காத அரிய வகை மரங்கள், விலங்குகள், பறவைகள் என பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. மேலும் அமேசான் காடுகளே பூமியின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது.

    அமேசான் காட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் காட்டுத்தீ பற்றியது. தொடர்ந்து சில தினங்களாக பற்றி எரிந்த தீ காடு முழுவதும் பரவி வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்காக ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து  பாலிவுட் திரைப்பிரபலங்களான அக்‌ஷய் குமார், அனுஷ்கா சர்மா, அர்ஜூன் கபூர், பூஜா பத்ரா, ஆயுஷ்மான் குரானா ஆகிய பாலிவுட் பிரபலங்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்திருந்தனர்.

    அமேசான் காட்டுத்தீ

    #AmazonRainforest, #savetheamazon போன்ற ஹேஷ்டேகுகள் மூலம் சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வந்தனர்.

    இதையடுத்து சமீபத்தில் ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டி காப்ரியோ  உலக அளவில் ஊடகங்கள் அமேசான் காட்டுத்தீ குறித்து பெரிதாக பேசவில்லை என வருத்தம் தெரிவித்தார்.

    இந்நிலையில் அமேசான் காடுகளை பாதுகாக்க காப்ரியோ தலைமையில் எர்த் அலையன்ஸ் எனும் அமைப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதன் மூலம் தற்போது அமேசான் காடுகளை காக்க நிதி திரட்டப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக அமேசான் காடுகளை காக்க, காப்ரியோ ரூ.35 கோடி நிதியாக வழங்கியுள்ளார்.

    Next Story
    ×