search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    சீனாவில் சாலை விபத்து -7 பேர் பலி

    சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.
    குவாங்சோ:    

    சீனாவின் குவாங்டாங் மாகாணம் யாங்ஜியாங் நகர் பகுதியில் நேற்று நள்ளிரவு சென்யாங்-ஹைக்கோ நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 11 பேர் காயமடைந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர், மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×