என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹுவாய் நிறுவன நிதி அதிகாரியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் : சீனா வலியுறுத்தல்
Byமாலை மலர்24 Aug 2019 6:43 AM GMT (Updated: 24 Aug 2019 6:43 AM GMT)
கனடாவில் கடந்த ஆண்டு அமெரிக்கா நாட்டின் வேண்டுகோளின் படி கைது செய்யப்பட்ட ஹுவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங் வான்சுவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சீன தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
ஒட்டாவா:
உலகளவில் பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனமான சீனாவின் ஹுவாய் நிறுவனம் அமெரிக்காவின் தடையை மீறி ஈரானுடன் வர்த்தக தொடர்பு கொண்டுள்ளதாகவும் அமெரிக்காவின் வர்த்தக ரகசியங்களை திருட முயற்சித்ததாகவும் டிரம்ப் நிர்வாகம் குற்றம்சாட்டி வருகிறது.
அதன் காரணமாக ஹுவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங் வான்சு கடந்த ஆண்டு கனடாவில் கைது செய்யப்பட்டார். இதற்கு ஹுவாய் நிறுவனம் மற்றும் சீன அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. அதற்கு பதிலடியாக சீனாவில் இரு கனடா நாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மெங் வான்சுவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள சீன தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் "மெங் வான்சு சம்பவம் ஒரு நீதித்துறை வழக்கு மட்டுமல்ல, தேவையற்ற குற்றச்சாட்டுகளில் ஒரு முன்னணி சீன நிறுவனத்தை முடக்குவதற்கு அமெரிக்கா தனது அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திய செயல். இது ஒரு மிக மோசமான நடத்தை ஆகும். கனடாவைச் சேர்ந்த இருவர் சீனாவில் கைது செய்யப்பட்டது முற்றிலும் மாறுபட்ட விஷயம். அவர்கள் சீனாவின் பாதுகாப்பு விதிமுறைகள் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்” என்றார்.
Next Story
×