search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமேசானில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ
    X
    அமேசானில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ

    அமேசான் காட்டில் பயங்கர தீ

    அமேசான் காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் எரிந்து நாசம் ஆகியுள்ளன.
    பிரேசிலியா:

    உலகின் மிகப்பெரிய இயற்கை காடாக விளங்குவது அமேசான் மழைக்காடுகள். இந்த காடுகள் உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணக்கிடைக்காத அரிய வகை மரங்கள், விலங்குகள், பறவைகள் என பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. மேலும் அமேசான் காடுகளே பூமியின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது.

    அமேசான் காட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் காட்டுத்தீ பற்றியது. தொடர்ந்து சில தினங்களாக பற்றி எரிந்த தீ காடு முழுவதும் பரவி வருகிறது. 

    இதனால் பல்லாயிரக்கணக்காக ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அமேசானில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ

    இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரேசில் அதிபர் ஜேய்ர் போல்சனோரோ, அமேசான் காடுகளில் தனியார் தொண்டு நிறுவனங்கள் தான் வேண்டுமென்றே தீ விபத்தை ஏற்படுத்தியுள்ளன என தெரிவித்தார்.

    அதிபரின் குற்றச்சாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சமூக நல ஆர்வலர்கள், அரசின் சுற்றுச்சூழல் எதிர்ப்பு கொள்கையால் அரசு ஆதரவாளர்களே அமேசான் காடுகளுக்கு தீ வைத்து விபத்தை ஏற்படுத்த தூண்டுவதாக தெரிவித்தனர்.     

    Next Story
    ×