search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க வெளியுறவுத்துறை  மந்திரி மைக் பாம்பியோ
    X
    அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ

    ஈரான் எண்ணெய் கப்பலுக்கு யாராவது உதவினால் கடும் நடவடிக்கை: அமெரிக்கா எச்சரிக்கை

    ஈரான் எண்ணெய் கப்பல் மீண்டும் கச்சா எண்ணெய் எடுத்துச்செல்ல எவராவது உதவ முற்பட்டால், அமெரிக்காவின் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    ஐ.நா:

    ஐரோப்பிய ஆணையத்தின் தடையை மீறி சிரியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி சென்றதாக கூறி ஈரானின் எண்ணெய் கப்பலை ஸ்பெயின் நாட்டின் ஜிப்ரால்டர் ஜலசந்தி அருகே இங்கிலாந்து கடற்படை இரு மாதங்களுக்கு முன்பு கைப்பற்றியது. இந்த எண்ணெய் கப்பலை கைப்பற்ற அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளை ஜிப்ரால்டர் அதிகாரிகள் நிராகரித்தனர். சமீபத்தில் இந்த கப்பல் விடுவிக்கப்பட்டது.

    இந்நிலையில், நேற்று ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை  மந்திரி மைக் பாம்பியோ, ஈரானிய எண்ணெய் கப்பல் தடைகளை மீறி மீண்டும் சிரியாவிற்கு கச்சா எண்ணெய் எடுத்த செல்ல முற்பட்டால் , அதைத் தடுக்க ஐரோப்பிய ஆணையத்தின் தடைகளுக்கு ஆதரவாக எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம் என கூறினார்.

    மேலும், சிரியாவிற்கு கச்சா எண்ணெய் செல்வதை அமெரிக்கா விரும்பவில்லை. அதன் மூலம் பெறப்படும் வருவாய், எண்ணற்ற அமெரிக்கர்களையும் உலக மக்களையும் கொன்று குவித்த பயங்கரவாத அமைப்புகளுக்கு செல்லும். எனவே இதை தடை செய்வது பகுத்தறிவான சிந்தனைதான் என நான் நம்புகிறேன், என்றார்.

    Next Story
    ×