search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச நீதிமன்றம்
    X
    சர்வதேச நீதிமன்றம்

    காஷ்மீர் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம்: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி

    காஷ்மீர் விவகாரம் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் இந்தியாவுடனான ராஜாங்க ரீதியிலான உறவு அனைத்தையும் துண்டித்தது. 

    இதையடுத்து, காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா சபையில் விவாதிக்க சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டது. அந்த முயற்சி ஐ.நா சபையில் படுதோல்வியடைந்தது.

    இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்தில் எழுப்ப பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

    பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி

    இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி, காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்துள்ளதை எதிர்த்து பாகிஸ்தான் சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட கொள்கை ரீதியில் முடிவெடுத்துள்ளோம் என தெரிவித்தார்.      

    Next Story
    ×