search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெய்சங்கர், அப்துல் மோமன் இணைந்து பேட்டி
    X
    ஜெய்சங்கர், அப்துல் மோமன் இணைந்து பேட்டி

    அசாமின் தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியாவின் உள்விவகாரம் - வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர்

    வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர், அசாமின் தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியாவின் உள் விவகாரம் என தெரிவித்துள்ளார்.
    டாக்கா:

    இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், வங்காளதேசத்துக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேபாள-இந்திய கூட்டு ஆணையத்தின் ஐந்தாவது கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.

    இந்நிலையில், வங்காள தேச வெளியுறவுத்துறை மந்திரி ஏ.கே.அப்துல் மோமனை தலைநகர் டாக்காவில் உள்ள மாநில விருந்தினர் மாளிகையில் ஜெய்சங்கர் சந்தித்து இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார்.

    அதைத்தொடர்ந்து, தன்மண்டியில் உள்ள பங்கபந்து நினைவு அருங்காட்சியகத்தில் உள்ள அந்நாட்டு தேசத்தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவகத்தில் மரியாதை செலுத்தினார்.

    இதையடுத்து, இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது ஜெய்சங்கர் கூறுகையில், அசாமில் எடுக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியாவின் உள் விவகாரம் என தெரிவித்தார்.

    தனது பயணத்தில் வங்காள தேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவை ஜெய்சங்கர் சந்தித்து பேசவுள்ளார்.வங்காள தேசத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பதில் இந்தியா முன்னணி நாடாக உள்ளது, வங்காள தேசத்திற்கு சலுகை வரிகளை சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×