search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிரியாவில் பயங்கரவாதிகளிடம் இருந்து 2 முக்கிய கிராமங்களை மீட்டது ராணுவம்
    X
    சிரியாவில் பயங்கரவாதிகளிடம் இருந்து 2 முக்கிய கிராமங்களை மீட்டது ராணுவம்

    சிரியாவில் பயங்கரவாதிகளிடம் இருந்து 2 முக்கிய கிராமங்களை மீட்டது ராணுவம்

    சிரியாவின் இட்லிப் மாகாணத்தில், பயங்கரவாதிகள் பிடியில் இருந்த இரண்டு கிராமங்களை சிரிய ராணுவம் மீட்டுள்ளது.
    டமாஸ்கஸ்:

    சிரியா நாட்டில் உள்ள இட்லிப் மாகாண பகுதிகளில் ரஷ்யா நாட்டில் தடை செய்யப்பட்ட ஜபாத் நூஸ்ரா மற்றும் சில பயங்கரவாத அமைப்புகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த பயங்கரவாத அமைப்பினர், அங்கிருந்த சில குக்கிராமங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். 

    இந்நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள நூஸ்ரா பயங்கரவாத கும்பல் மீது சிரியா ராணுவ படைகள் தாக்குதல் நடத்தி 2.கிராமங்களை மீட்டுள்ளது.

    இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், “நேற்று நடந்த தாக்குதலில் பெரும்பாலான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து பல்வேறு வகையான ஆயுதங்களும் , வெடி மருந்துகளும் கைப்பற்றப்பட்டன, மேலும் இட்லிப் மாகாணத்தில் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த மதயா மற்றும் தால்-அல்-அர்ஜாகி என்ற இரு கிராமங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன” என தெரிவித்தனர். 

    ரஷ்யா மற்றும் துருக்கி நாடுகள் தலையிட்டு சமரசம் செய்து ஏற்படுத்திய ஒப்பந்தத்திற்கு பயங்கரவாதிகள் கட்டுப்படாததால் சிரிய ராணுவம் தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
    Next Story
    ×