search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவிற்கு எதிராக போராட்டம் நடைபெற்ற காட்சி
    X
    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவிற்கு எதிராக போராட்டம் நடைபெற்ற காட்சி

    காஷ்மீர் நடவடிக்கையால் ஆத்திரம்- இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் பயங்கரவாத குழுக்கள்

    காஷ்மீர் நடவடிக்கையால் கடும் ஆத்திரமடைந்துள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பயங்கரவாத குழுவினர் இந்தியாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    முசாபராபாத்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசமாக பிரித்துள்ளது. இதற்கு ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஜம்மு காஷ்மீரில் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக ராணுவம் குவிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

    இந்தியாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை ஐ.நா. சபையின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளது. 

    இந்தியாவுக்கு எதிரான போராட்டம்

    இந்நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத குழுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    வியாழக்கிழமை முசாபராபாத்தில் உள்ள பிரஸ் கிளப் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஜம்மு காஷ்மீரின் பிரிவினைவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த காலித் சாய்புல்லா, நயிப் அமீர் மற்றும் முன்னாள் பயங்கரவாதிகள் சிலர் பங்கேற்றனர். 

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய சாய்புல்லா, ‘நாம் பேசுவதைவிட செயலில் காட்ட வேண்டும். நாங்கள் அனைவரும் தீவிரமான போராட்டத்திற்கு தயாராக இருக்கிறோம். சலாஹூதீன் தொடர்ந்து போராடுங்கள், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’ என இந்தியாவிற்கு எதிராக வெறுக்கத்தக்க வகையில் பேசினார்.

    ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகார சட்டங்களான 370 மற்றும் 35ஏ ரத்து செய்யப்பட்ட பிறகு, இந்தியாவை குறிவைக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அதிகாரிகள் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×