search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
    X
    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

    காஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார் ஆகிறது - இம்ரான்கான் புலம்பல்

    பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதியை மீட்க இந்தியா போருக்கு தயார் ஆகிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், தங்கள் தரப்புக்கு ஆதரவாக உலக நாடுகளை திரட்ட முயன்றது. ஆனால் அதில் தோல்வியடைந்துள்ள அந்த நாடு, தற்போது இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எதிரான ஆற்றாமையை புலம்பலாக வெளியிட்டு வருகிறது.

    அந்தவகையில் காஷ்மீரில் போருக்கு தயாராவதாக இந்தியா மீது மற்றொரு குற்றச்சாட்டை அந்த நாட்டு பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். பாகிஸ்தான் சுதந்திர தினத்தையொட்டி நேற்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் தொலைக்காட்சிமூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறுகையில், ‘பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதியை மீட்பதற்காக இந்தியா போருக்கு தயாராவதாக, எங்கள் நாட்டு படையினருக்கு வலுவான ஆதாரம் கிடைத்து உள்ளது. ஆனால் இதற்கு தக்க பதிலடி கொடுக்க எங்கள் ராணுவமும் தயாராக இருக்கிறது என்று தெரிவித்தார்.

    காஷ்மீரில் இந்தியா மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளை மீண்டும் கண்டித்த இம்ரான்கான், இந்த நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் நாடுகள்கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்தார். இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவதற்காக இந்தியா எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் எதிர்வினையாக பாகிஸ்தான் 2 அடி எடுத்து வைக்கும் என்றும் அவர் கூறினார்.
    Next Story
    ×