search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
    X
    பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

    பிரிட்டனில் 3 பில்லியன் டாலர்கள் மதிப்பில் புதிய சிறைகள்

    பிரிட்டனில் புதிய சிறைகள் கட்டுவதற்கும், தற்போதுள்ள சிறைகளை புதுப்பிப்பதற்கும் 2.5 பில்லியன் பவுண்டுகள் ஒதுக்கப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
    லண்டன்: 

    கடந்த சில ஆண்டுகளாக பிரிட்டனில் குற்றச்செயல்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அதிலும் கத்திக் குத்து, கத்தியை காட்டி பணம் பறித்தல் போன்ற கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 2010 ஆண்டு முதல் காவல்துறைக்கான நிதி குறைப்பு மற்றும் ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் குற்றங்கள் அதிகரித்து வருவதாக அரசு மீது விமர்சனம் எழுந்துள்ளது. 

    இந்நிலையில், குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், 10 ஆயிரம் புதிய சிறைச்சாலைகள் கட்டுவதற்காகவும், பழைய சிறைச்சாலைகளை புதுப்பிக்கவும் 2.3 பில்லியன் பவுண்டுகள் (3 பில்லியன் டாலர்) ஒதுக்கீடு செய்யப்படும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். தற்போது உபயோகமின்றி இருக்கும் பழைய சிறைக்கட்டிடங்களை புதுப்பிப்பதும் இந்த தொகையில் அடங்கும் என அறிவித்துள்ளார்.

    மேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் 20 ஆயிரம் காவல்துறை அதிகாரிகளை பணி நியமனம் செய்ய உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இன்று டவுன் ஸ்ட்ரீட்டில்  நடைபெறும் சந்திப்பில், குற்றங்களை கட்டுப்படுத்தி நாட்டில் அமைதியையும் நீதியையும் நிலை நாட்டுவது குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் விவாதிக்க உள்ளார்.
    Next Story
    ×