search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீட்புப்பணிகள் நடைபெற்ற காட்சி
    X
    மீட்புப்பணிகள் நடைபெற்ற காட்சி

    மியான்மர் நாட்டில் கடும் நிலச்சரிவு- 22 பேர் பலி

    மியான்மர் நாட்டில் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 22 பேர் பலியாகினர். 47 பேர் காயமடைந்துள்ளனர்.
    மாலமைன்:

    மியான்மர் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மோன் மாநிலத்தின் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. இங்குள்ள தெய் பியார் கோன் கிராமத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 16 வீடுகள் மற்றும் ஒரு குரு மடமும் அழிந்தன.

    இதையடுத்து மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 22 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 47 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டவர் ஒருவர் கூறுகையில், “திடீரென சத்தம் கேட்டது. நான் திரும்பி பார்க்கையில் என் வீட்டின் மீது மண் சரிந்து வீடு இடிந்து விழுந்தது. எனது இரு மகள்களையும், உறவினர்கள் 5 பேரையும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை” என கண்ணீருடன் தெரிவித்தார். 

    மேலும் அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×