search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் தேசிய கொடிகள்
    X
    இந்தியா மற்றும் பாகிஸ்தான் தேசிய கொடிகள்

    காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து முடிவை மறு பரிசீலனை செய்தால் நாங்களும் தயார்: பாகிஸ்தான்

    காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்ட முடிவை இந்தியா மறு பரிசீலனை செய்தால், எங்கள் முடிவை நாங்களும் பரிசீலிப்போம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்து இந்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தியாவுடனான ராஜாங்க ரீதியிலான உறவு மற்றும் வர்த்தகத்தையும் துண்டித்தது.

    மேலும், இந்தியா-பாகிஸ்தான் இடையே இயங்கும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை நிறுத்துவதாக பாகிஸ்தான் அறிவித்தது. இந்திய திரைப்படங்கள் எதுவும் இனி  திரையிடப்படாது எனவும் தெரிவித்தது. இதனால் இரு நாடுகள் இடையே மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

    பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி

    இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது. இது ஒருதலைபட்சமான மற்றும் சட்ட விரோதமான முடிவு. ஆகையால் இந்தியாவுடனான ராஜாங்க ரீதியிலான உறவு உள்பட அனைத்து இணைப்பையும் பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்ட முடிவை இந்தியா மறு பரிசீலனை செய்தால், எங்கள் முடிவை நாங்களும் பரிசீலிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×