என் மலர்

  செய்திகள்

  பிரேசில் முன்னாள் அதிபரை பொதுச் சிறைக்கு மாற்றும் முடிவு ரத்து- உச்ச நீதிமன்றம்
  X
  பிரேசில் முன்னாள் அதிபரை பொதுச் சிறைக்கு மாற்றும் முடிவு ரத்து- உச்ச நீதிமன்றம்

  பிரேசில் முன்னாள் அதிபரை பொதுச் சிறைக்கு மாற்றும் முடிவு ரத்து- உச்ச நீதிமன்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுவித்து வரும் பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோவை பொதுச்சிறைக்கு மாற்றும் முடிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
  ரியோ டி ஜெனிரோ:

  ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ, ஒரு வருடத்திற்கும் மேலாக குரிடிபாவில் உள்ள மத்திய போலீஸ் தலைமயகத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவரது ஆதரவாளர்கள் தலைமையகத்தின் முன்பு அடிக்கடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், அவரை இங்கு வைத்திருப்பது ஆபத்து என கருதி சா பாலோ பிராந்தியத்தில் உள்ள பொதுச் சிறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

  இதை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து மற்றொரு சிறையான டிரெமெபே சிறையில் மாற்ற நீதிபதி உத்தரவிட்டார். இதை கண்டித்தும் அவரது கட்சியினர் போராட்டங்கள் நடத்தினர். மேலும் இந்த தீர்ப்பை மாற்ற வேண்டும் என லூயிஸின் கட்சி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. 

  பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ

  எனவே இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்கள் மூலம் முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் உள்ள 11 நீதிபதிகளில் 10 பேர் முன்னாள் அதிபரை வேறு சிறைக்கு மாற்றும் முடிவுக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். ஒருவர் மட்டும் இந்த விவகாரத்தை மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என கருத்து தெரிவித்தார்.

  பெருவாரியான நீதிபதிகளின் கருத்தின்படி, லூயிசை வேறு சிறைக்கு மாற்றும் முடிவு ரத்து செய்யப்பட்டது. மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வெளியாகும்வரை குரிடிபா போலீஸ் தலைமையகத்தில் லூயிஸ் இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
   
  Next Story
  ×