என் மலர்

  செய்திகள்

  தண்ணீர் பஞ்சம்
  X
  தண்ணீர் பஞ்சம்

  இந்தியா தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் - அமெரிக்க நிறுவனம் அதிர்ச்சி தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்காவை சேர்ந்த உலக தண்ணீர் ஆய்வு நிறுவனம் ஒன்று உலக அளவில் நடத்திய ஆய்வில் இந்தியா தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் என அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
  வாஷிங்டன்:

  சென்னை மாநகரம் கடந்த சில மாதங்களாக தண்ணீர் பற்றாக்குறையை அனுபவப்பூர்வமாக உணர்ந்து வருகிறது. தண்ணீர் பற்றாக்குறை பற்றி அமெரிக்காவை சேர்ந்த உலக தண்ணீர் ஆய்வு நிறுவனம் ஒன்று உலக அளவில் ஆய்வு நடத்தி வந்தது. தற்போது அந்த நிறுவனம் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.

  அதாவது, கத்தார், இஸ்ரேல், லெபனான், ஈரான், ஜோர்டான், லிபியா, குவைத், சவுதி அரேபியா, எரித்திரியா, சன் மரினோ, பக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் (யூ.ஏ.இ), இந்தியா, பாகிஸ்தான், துர்க் மெனிஸ்தான், ஓமன், போஸ்ட்வானா ஆகிய 17 நாடுகள் (அதாவது உலக மக்கள் தொகையில் கால் பகுதி) கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்தித்து வருவதாக ஒரு பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 13-வது இடத்தில் உள்ளது. இந்த நாடுகள் விவசாயம், தொழிற்சாலை மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கு மட்டும் 80 சதவீத நிலத்தடி நீரையும், இதர நீர் ஆதாரங்களையும் பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் ஒரு நாள் குடிக்க ஒரு சொட்டு நீர் கூட கிடைக்காத நிலை வந்துவிடும்.

  மேற்கண்டவாறு அந்த நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது.

  Next Story
  ×