search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலிதா ஜியா
    X
    கலிதா ஜியா

    பல் வலி சிகிச்சைக்காக ஜாமீன் கேட்கும் முன்னாள் பிரதமர்

    ஊழல் வழக்கில் டாக்கா சிறையில் உள்ள வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தனக்கு உடல் நிலை சரியில்லாததால் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஜாமீன் வழங்க கோரி டாக்கா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
    டாக்கா :

    வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா. 3 முறை பிரதமர் பதவி வகித்துள்ளார். இவர் தனது பதவி காலத்தின்போது அவரது மறைந்த கணவர் ஜியாவுர் ரஹ்மான் பெயரில் அறக்கட்டளை தொடங்கி வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சுமார் 2½ லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த ஊழல் வழக்கில் கலிதா ஜியாவுக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. மேலும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவருக்கு கூடுதலாக 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த அக்டோபர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி அவர் தற்போது தலைநகர் டாக்கா சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

    இந்த நிலையில், தனக்கு உடல் நிலை சரியில்லாததால் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக ஜாமீன் வழங்க கோரி கலிதா ஜியா டாக்கா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர், சர்க்கரை நோய் மற்றும் பல் சார்ந்த நோய்களால் தான் அவதிப்பட்டு வருவதாகவும், எனவே உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
    Next Story
    ×