search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5 வயது சிறுமி ரிஹாம்
    X
    5 வயது சிறுமி ரிஹாம்

    இறக்கும் தருவாயில் தங்கையின் உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுமி

    சிரியாவில் இறக்கும் தருவாயில் கூட தங்கையின் உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுமியின் செயல் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
    சிரியா:

    சிரியாவில் அரசுப் படைகளும் கிளர்ச்சியாளர்களும் கடும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று இட்லிப் மாகாணத்திலுள்ள அரிஹா என்ற பகுதியில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப்படைகள் வான்வழி தாக்குதல்  நடத்தின.  இந்த தாக்குதலில் அரிஹா பகுதியிலிருந்த 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.

    அப்போது, அம்ஜத்அல் அப்துல்லா என்பவரது வீடும் நொறுங்கியது.  இதில் வீட்டில் இருந்த அப்துல்லா மற்றும் அவரது மனைவி ஆஸ்மா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்போது இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த அவர்களது 5 வயது மகள் ரிஹாம் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

    தங்கையின் உயிரை காப்பாற்றிய 5 வயது சிறுமி ரிஹாம்

    ஆனால் உயிருக்குப் போராடிய நேரத்திலும் ரிஹா செய்த செயல் அனைவரையும் கண்கலங்க செய்தது.

    இடிபாடுகளில் சிக்கிய தனது 7 மாத தங்கையான துகா கீழே விழுந்துவிடக்கூடாது என்பதற்காக அவரின் சட்டையை இறுக்கமாக பிடித்துக்கொண்டார். இதனால் அந்தக் குழந்தை கீழே விழாமல் காயங்களுடன் உயிர் தப்பியது.

    ஆனால், தங்கையை காப்பாற்றிய சிறுமி ரிஹாம் பரிதாபமாக உயிரிழந்தார். 
    Next Story
    ×